டி20 உலகக் கோப்பை தொடர் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிப் பல விறுவிறுப்பான கட்டங்களைக் கடந்து இன்று (நவம்பர் 13) இறுதி போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோப்பையை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்ப்பார்ப்போடு
அரையிறுதியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் மற்றும் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி இன்று கோப்பைக்காக மோதி வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் களமிறங்கினர்.
ரிஸ்வான் 15 ரன்களிலும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய ஷான் மசூத் தனது பங்கிற்கு 38 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரைத் தொடக்கம் முதலே அபாரமாகப் பந்து வீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி இந்திய அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெளியேறச் செய்தது.
இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
மோனிஷா
சிறையை விட கொடிய சிறப்பு முகாம்: 4 பேருக்கு நடந்தது என்ன?
மழையின் தீவிரம் : வானிலை அப்டேட்!