T20 World Cup: Will India register first win?

T20 World Cup: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று (ஜூன் 5) தனது முதல் போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்த் ஆகிய அணிகள் உள்ளன.

குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள் ஆகிய அணிகள் உள்ளன.

இதில், இந்தியா தனது முதல் போட்டியில் இன்று அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்காக, இந்தியா வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றிபெற்றது என்றாலும், அந்த ஆட்டத்தில் விராட் கோலி பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு வந்த விராட் கோலி எந்த ஒரு பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. போட்டிக்கு ஒரு நாள் மட்டும் தான் இடைவெளி இருப்பதால் நியூயார்க் மைதானத்தில் பயிற்சி செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், ஐபிஎல் தொடருக்குப் பின்னர் விராட் கோலி நேரடியாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அயர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், விராட் கோலி , சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

அயர்லாந்து அணி :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, ராஸ் அடேர், பேரி மெக்கார்த்தி, மார்க் அடேர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’இந்தியா கூட்டணி’ கூட்டம் : டெல்லி சென்றடைந்தார் ஸ்டாலின்

’பொண்ணு அவங்க இல்ல’ : தம்பி திருமணத்திற்காக VP வைத்த கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *