டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகிய மூவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
இந்திய அணி அக்டோபர் 23 ஆம் தேதி நேரடியாக சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது.
இன்று (அக்டோபர் 16) தேதி முதல் நாள் போட்டிகள் தொடங்கின.
முதலாவதாக நமீபியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதின. இதில் இலங்கை அணியை நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பெற்றது.
முதல் போட்டியிலேயே இலங்கை அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
இதில் பேட்டிங்கை தேர்வு செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் எடுத்திருந்தனர்.
ஆகையால் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே 14 ரன்கள், கோலின் அக்கர்மன் 17 ரன்கள், டாம் கூப்பர் 8 ரன்கள், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவர் இறுதியில் கடைசி ஒரு பந்து மீதம் இருக்கையில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
முதல் நாள் போட்டிகள் மிகவும் பரபரப்பான முடிவுகளை வெளிப்படுத்தியதால் டி20 உலகக் கோப்பை தொடர் சூடுபிடித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மோனிஷா
ஆரம்பமே அதிர்ச்சி: இலங்கைக்கு குட்டு வைத்த நமீபியா!
அமிதஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்!