டி2௦ உலகக்கோப்பை: இந்திய அணிக்கான வீரர்களை இறுதி செய்த டிராவிட்?

விளையாட்டு

ஜூன் மாதம் நடைபெறுகின்ற டி2௦ உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய அணியில் கிட்டத்தட்ட வீரர்களின் இடம் உறுதியாகி விட்டதாக தெரிகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது சிராஜ், அக்சர் படேல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கே.எல்.ராகுல், சிவம் துபே, ரவி பிஷ்னோய் என 12  வீரர்களின் இடம் உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல விக்கெட் கீப்பர் ரோலுக்கு இஷான் கிஷன், ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை தேர்வு செய்யப்போவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கும் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடற்தகுதியை நிரூபிக்க போராடி வருகிறார்.

டி2௦ அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவும் காயத்தில் இருந்து மீண்டு உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், அவரும் அணிக்குள் வந்து விடுவார்.

சூர்யாவை பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் 2-வது பாதியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என கூறப்படுகிறது.

எனவே ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே தற்போது டி2௦ உலகக்கோப்பை தொடருக்கான, இந்திய வீரர்கள் தேர்வு முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

எனவே ஐபிஎல் தொடர் என்பது மேற்கண்ட வீரர்களுக்கு ஒரு வார்ம் அப் பயிற்சியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஐபிஎல் தொடரில் மேற்கண்ட வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதை பொறுத்துத்தான் அவர்களுக்கான டி2௦ கதவுகள் திறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி2௦ உலகக்கோப்பை உத்தேச அணி விவரம்:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, பும்ரா, கே.எல்.ராகுல், முகமது சிராஜ், முஹமது ஷமி, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங்,  சிவம் துபே, ரவி பிஷ்னோய், ரிஷப் பண்ட் (அ) இஷான் கிஷன்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைய தடை : பயணிகள் அவதி!

AK63: அஜித்துக்கு வில்லன் இவரா?… வெளியான சூப்பர் அப்டேட்!

+1
3
+1
0
+1
1
+1
5
+1
2
+1
4
+1
1