டி2௦ உலகக்கோப்பை தொடரில் நேற்று (ஜுன் 12) நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் நேற்று (ஜுன் 12) நடைபெற்ற ‘ஏ’ பிரிவு போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அமெரிக்க அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர், 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்து
வேலைவாய்ப்பு : வ.உ.சி துறைமுகத்தில் பணி!
முண்டாசுப்பட்டி – நகைச்சுவை விருட்சத்தின் தனித்துவமான கிளை!