டி20 உலக கோப்பை வெற்றி: இந்திய அணியை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றியது.

ஆழ்கடலில் தேசிய கொடி

இதனை கொண்டாடும் வகையிலும், இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது “டெம்பிள் அட்வென்ச்சர்” என்ற ஸ்கூபா டைவிங் குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.

மேலும், இந்திய தேசிய கொடியை ஆழ்கடலுக்குள் எடுத்து சென்று இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம்

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கான வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

அதில், சென்னை தீவுத்திடலில் போட்டியை கண்டு ரசித்த ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை துள்ளி குதித்து, ஆட்டம் ஆடி கொண்டாடினர்.

அண்ணாநகரில் ஒன்று திரண்ட ரசிகர்கள் இந்திய அணிக்கு பாட்டுப்பாடி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையில் உள்ள தனியார் மாலில் இந்திய அணியின் வெற்றியை அங்கிருந்த பல இளைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

டெல்லியில் வெற்றி கொண்டாட்டம்

இந்திய அணி வெற்றி பெற்றதை தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் “இந்தியா… இந்தியா…” என முழக்கமிட்டும், “பாரத் மாதா ஹி ஜெய்” “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டும் கொண்டாடினர்.

கேரள ரசிகர்கள் கொண்டாட்டம்

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஐதராபாத்தில் கொண்டாட்டம்

ஐதராபாத்தில் உள்ள ஒரு சாலையில் இந்திய அணியின் வெற்றியை பலர் ஒன்றுகூடி மேளதாளங்கள் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

புனேவில் வெற்றி கொண்டாட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாலையில் ஒன்று திரண்ட ரசிகர்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி இந்தியாவின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சத்தீஸ்கரில் கொண்டாட்டம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இந்தியாவின் வெற்றியை பட்டாசுகள், வான வேடிக்கைகள் வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர்.

நியூயார்க்கில் கொண்டாட்டம்

நேற்று நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பகுதியில் ஒளிபரப்பட்டது. இதை அங்கிருந்த பலர் ஆர்வமுடன் கண்டு களித்தனர். அப்போது இந்திய அணி வெற்றி பெற்றதும் அங்கிருந்த பலர் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றனர்.

இதேப்போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒன்று திரண்ட இந்திய அணி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெற்றியை கொண்டாடினர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுவில் கிக் இல்லை… துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா

T20 World Cup: இந்திய அணி வெற்றி – வாழ்த்திய தலைவர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *