டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியும், ஜிம்பாப்வே அணியும் வெற்றிபெற்றுள்ளன.
16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ரன்களும், கிறிஸ் 16 ரன்களும் எடுத்தனர்.
பின்னர், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதுபோல் மற்றொரு உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் குரூப் பி பிரிவைச் சேர்ந்த ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் நேற்று மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிக்கந்தர் ராஸா 48 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.
அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, ஆரம்பத்திலேயே தடுமாற ஆரம்பித்தது.
முதல் 4 விக்கெட்டுகளை 22 ரன்களுக்குள் இழந்தது. ஜிம்பாப்வே அணியின் ஆதிக்கத்தால் இறுதியில், அயர்லாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஜெ.பிரகாஷ்
6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
டி20 உலகக்கோப்பை: அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் யார் யார் ?