ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நீண்ட வருடங்களாக தமிழ்நாடு அரசிடம் முன்மொழிந்த கோரிக்கைகளில் திரைப்படம் தவிர்த்து பிற கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாகும்.
பிற விளையாட்டுக்களை காட்டிலும் இந்தியாவில் கிரிக்கெட் விரும்பி பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு உலக கோப்பை, T20 மேட்ச், இந்திய பிரிமியர் லீக் என நடைபெறும் போதெல்லாம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு வந்ததது ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், எட்டாவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ஆம் தேதி தொடங்குகிறது.
இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன
.இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள், ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளைக் காண இளைஞர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நம்பி இந்த ஒப்பந்தம் நடந்திருக்கிறது.
இராமானுஜம்
மகள் கொலை -சோகத்தில் தந்தை உயிரிழப்பு!