T20 World Cup 2024: 2024 டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஜூன் 2 அன்று துவங்கிய நிலையில், இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29 அன்று நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 20 அணிகள் பங்குபெற்றுள்ள நிலையில், மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதில் 16 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள மைதானங்களில், மீதமுள்ள 39 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் வெற்றி பெரும் அணிகளுக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த தொடரில் மொத்தம் 11.25 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.93.5 கோடி) மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
முதலாவதாக, இந்த 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு, ரூ.2.45 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.20 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, இந்த தொடரில் ரன்னர்-அப் ஆகும் அணி 1.28 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.10 கோடி) பரிசுத்தொகையாக பெறவுள்ளது.
அரையிறுதி வரை முன்னேறி, தொடரில் இருந்து வெளியேறும் 2 அணிகளுக்கு, தலா 787,500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6.5 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
அதேபோல, ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டம் வரை முன்னேறி, தொடரில் இருந்து வெளியேறும் 4 அணிகளுக்கு, தலா 382,500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில், புள்ளிப்பட்டியலில் 9 – 12 இடங்களில் உள்ள 4 அணிகளுக்கு, தலா 247,500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடி) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 13 – 20 இடங்களில் உள்ள 8 அணிகளுக்கு, தலா 225,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.87 கோடி) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, லீக் சுற்று ஆட்டங்கள் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்களில், ஒவ்வொரு அணி பெரும் ஒவ்வொரு வெற்றிக்கும் 31,154 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.25 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டஃப் பைட் கொடுத்த அதிமுக, அமமுக: அசராத திமுக
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் – பருப்பு அரைத்த குழம்பு
பியூட்டி டிப்ஸ்: முக இறுக்கத்துக்கு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்?