இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது டி20 இன்று தொடங்குகிறது!

விளையாட்டு

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 29) இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்திவிட்டது.

அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20  தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் மூன்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று (ஜூலை 29) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணியில் அஸ்வின், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட்,

ஹர்த்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் தொடரில் அணியை வழி நடத்திய ஷிகர் தவான், தொடர் நாயகன் சுப்மான் கில் ஆகியோருக்கு இடமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி நிகோலஸ் பூரன் தலைமையில் விளையாடுகிறது.

டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் 13இல் இந்தியாவும், 6இல் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றுள்ளன, ஓர் ஆட்டத்தில் முடிவில்லை.

– ராஜ்

+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *