கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!

விளையாட்டு

பல்வேறு பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி டிசம்பர் 18 அன்று லூசைல் மைதானத்தில் நடைபெற்றது.

FIFA உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் கோல் செல்லாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் அப்போட்டியின் நடுவராக இருந்த சீஸ்மன் மார்சினியாக் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது தான் கால்பந்து ரசிகர்களிடையே மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மெஸ்ஸி தனது அணிக்காக மூன்றாவது கோலை அடித்தபோது, வெளியில் இருந்த அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டதாகவும், இதனால் அந்த கோல் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், இதை சரியாக கவனிக்காமல் நடுவர் தவறு செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதன் காரணமாக 2022 உலக்கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்துடன் கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர்.

36 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தனது நாட்டில் இன்னும் அந்த கொண்டாட்டத்திலிருந்து வெளியே வராத இந்த சூழலில், இந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், மெஸ்ஸி அடித்த கோல் செல்லாது என எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, போட்டியின் நடுவர் போலந்து நாட்டைச் சேர்ந்த சீஸ்மன் மார்சினியாக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.

அவருடைய பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியைக் கிளப்பியிருந்த நிலையில் , மேலும் மெஸ்ஸி மீதான பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

அவர் பேசும் போது , நான் பதில் சொன்ன பின்பு ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டேனா என்பதனை நீங்களே சொல்லுங்கள்.

”பொதுவாக கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடிக்கும் போது மைதானத்திற்குள் ஒரு வீரரோ , சப்ஸ்டிடியூட்டோ மற்றும் அணி சார்ந்த நிர்வாகத்தினரோ யாரும் இருக்க கூடாது. ஒரு வேளை அப்படி இருந்தால் ரெஃப்ரீயாக இருப்பவர் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார் என்பது தான் விதி.” இது எனக்கும் தெரியும்.எல்லோருக்கும் தெரியும் .

இப்போது நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்.ஆம் நான் ஒரு தவறு செய்து விட்டேன். மார்க்கோஸ் அகுனா எதிர் தாக்குதலை சரியாக கையாளவில்லை. அப்போது நான் யெல்லோ கார்டை காட்டி அவரை வெளியே அனுப்பினேன்.சரியாக ஆடாதவரை வெளியே அனுப்பி ஃபிரான்ஸ் அணிக்கு நல்லது செய்தது நான் செய்த தவறு தான்.

இப்போது உங்கள் விமர்சனத்துக்கு பதில் சொல்கிறேன். மெஸ்ஸி கோல் அடிக்கும்போது 2 அர்ஜென்டினா வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்த காட்சியை மட்டுமே எடுத்து வெளியிட்டு, நியாயம் கேட்கும் பிரான்ஸ் ரசிகர்களுக்கு பதிலடியாக, பிரான்ஸ் அணிக்காக கிலியன் எம்பாப்பே கோல் போடும்போது பிரான்ஸ் வீரர்கள் 7 பேர் மைதானத்திற்குள் நுழைந்தனர்.இதனை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன். இந்தப் படத்தைப் பாருங்கள்.

2 அர்ஜென்டினா வீரர்கள் நுழைந்ததை வைத்து என்னை கேட்ட பிரான்ஸ் ரசிகர்களே , 7 பிரான்ஸ் வீரர்கள் நுழைந்ததை நீங்கள் பார்க்கவில்லையா என மறு கேள்வி கேட்டுள்ளார்.

இதன்மூலம், மெஸ்ஸியின் கோல் செல்லாது, கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், எம்பாப்பேவின் கோலும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் மார்சினியாக். அவரது பதில் இப்போது உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சிறுமி டானியாவுக்கு மீண்டும் சிகிச்சை: போனில் தைரியம் சொன்ன முதல்வர்!

மதவாத கட்சிகளை அனுமதிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

+1
12
+1
28
+1
3
+1
43
+1
12
+1
19
+1
19

6 thoughts on “கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!

  1. Well said Szymon Marciniak Mbappe ..be satisfied with the golden Boot. We need Argentina to win the cup.wooo…hooo..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *