தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
நேற்று (அக்டோபர் 2) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இந்திய அணியானது கே.எல் ராகுல்(57), ரோகித் சர்மா(43), விராட் கோலி(49), சூர்யகுமார் யாதவ்(61) என அனைவரது அசத்தலான பங்களிப்பினாலும் 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது.
பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
ஆட்டநாயகன்
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 57 ரன்களை குவித்தார்.
சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என 61 ரன்கள் எடுத்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எடுக்க பெரிதும் உதவினார்.
இதனால் ஆட்டநாயகன் விருது இரண்டு பேருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து கே.எல்.ராகுல் பேசியதாவது, ஒரு தொடக்க வீரராக சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டியது அவசியம்.
அந்த வகையில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன்.
பேட்டிங் பிட்ச்
இந்த போட்டியில் என்னுடைய மனநிலை மிகச் சிறப்பாக இருந்தது. முதல் பந்தில் நான் பவுண்டரி அடித்த பிறகு நிச்சயம் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடப் போகிறேன் என்று முடிவு செய்து கொண்டேன்.

முதல் இரண்டு ஓவர்கள் முடிந்த பிறகு பந்து கிரிப்பாகி வந்ததால் நானும் ரோகித்தும் இது நல்ல பேட்டிங் பிட்ச் என்பதை புரிந்து கொண்டு 180 ரன்கள் வரை டார்கெட் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.
ஆனால் இறுதியில் இன்னும் நிறைய ரன்கள் கிடைத்தது. இந்த ஆட்டநாயகன் விருது எனக்கு கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது.
சூர்யகுமாருக்கு தான் சென்றிருக்க வேண்டும்
ஏனெனில் நிச்சயம் இந்த விருது சூர்யகுமார் யாதவுக்கு தான் சென்றிருக்க வேண்டும். அவரே இந்த போட்டியின் திருப்புமுனையை அளித்தார். அவர் பேட்டிங் விளையாடிய விதம் தான் இந்த ஆட்டத்தை முற்றிலுமாக திருப்பியது.

மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். அந்த வகையில் அவருக்கே இந்த விருதினை வழங்கியிருக்க வேண்டும் என்று கே.எல்.ராகுல் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியா-தென் ஆப்பிரிக்கா: டி20 தொடரில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!