மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் அணிகளில் மிகுந்த பலம்வாய்ந்த அணி என மும்பை இந்தியன்சை கூறலாம். பல்தான்கள் என அழைக்கப்படும் இந்த அணி 5 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது.
ஆனால் நடப்பு தொடரில் அந்த அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
கடந்த 2௦13-ம் ஆண்டில் இருந்து முதல் போட்டியினை தோற்பதை மும்பை வாடிக்கையாகவே வைத்துள்ளது. என்றாலும் அடுத்தடுத்து அந்த அணி தோல்வியைத் தழுவியதால், அணி நிர்வாகமே ஆடிப்போய் விட்டது.
இந்தநிலையில் அந்த அணிக்கு மகிழ்ச்சி தரும் விஷயமொன்று நிகழ்ந்துள்ளது. டி2௦ அதிரடி பேட்ஸ்மேனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது காயமடைந்த சூர்யா அதற்காக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டியுள்ளார்.
GT vs PBKS: தவறாக எடுக்கப்பட்ட வீரரால் வெற்றியை சுவைத்த பஞ்சாப்
இதற்கான தடையில்லா சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று (ஏப்ரல் 5) அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
வருகின்ற 7-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடேவில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என மும்பை வீரர்கள் கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Suryakumar Yadav on the way to join Mumbai Indians. 🔥 pic.twitter.com/9zI5SH1NS3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 5, 2024
அதோடு சூர்யாவும் அணியில் இணைந்துள்ளதால் அவர்களின் தன்னம்பிக்கை மேலும் அதிகரித்து இருக்கிறது.
அதேநேரம் தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் டெல்லியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், நிச்சயம் இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 8-ல் விசாரணை!
GOLD RATE: குறைந்தது விலை… சவரன் எவ்வளவுன்னு செக் பண்ணிக்கங்க!
மயிலாடுதுறை: போக்கு காட்டும் சிறுத்தை… தேடுதல் வேட்டையில் வனத்துறை!