Suryakumar equals rohit record

வானமே எல்லை: அடுத்தடுத்து ரோஹித், கோலி சாதனைகளை காலி செய்த சூர்யா!

விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து புதிய சாதனைகளை படைத்துள்ளார். Suryakumar equals rohit record

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரில் 1-1 என கோப்பையை தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனால் நேற்று (டிசம்பர் 14) நடைபெற்ற 3-வது டி 20 போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

ஆனால் ஜெய்ஸ்வால், சூர்யாவின் அதிரடி பேட்டிங், குல்தீப்பின் சுழல் மாயாஜாலம் ஆகியவற்றால் இந்தியா எளிதாக  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த டி20 தொடரின் மூலம் கேப்டன் சூர்யகுமார் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

முன்னதாக 2-வது டி20 போட்டியின் போது குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்து, கோலியின் சாதனையை சமன் செய்தார்.

நேற்றைய (டிசம்பர் 14) டி20 போட்டியில் சூர்யா தன்னுடைய 4-வது டி20 சதத்தினை அடித்தார்.  ரோஹித் 140 இன்னிங்ஸிலும், மேக்ஸ்வெல் 92 இன்னிங்ஸிலும் செய்ததை சூர்யா 57 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார்.

இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யா, கோலியை (117) முந்தியுள்ளார். 120 சிக்ஸர்களுடன் சூர்யகுமார் இரண்டாவது இடத்திலும், 182 சிக்ஸர்களுடன் ரோஹித் முதல் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல POTM எனப்படும் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதினை டி20-யில் அதிக முறை (14) வாங்கிய இரண்டாவது வீரர்  என்ற பெருமையும் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.

இதில் கோலி 15 விருதுகளுடன் முதல் இடத்திலும், ரோஹித் 12 விருதுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 1 விருதினை வாங்கினால் கோலியின் சாதனையை சூர்யா சமன் செய்து விடுவார்.

ரோஹித் 148 இன்னிங்ஸிலும், கோலி 115 இன்னிங்ஸிலும் செய்த சாதனையை சூர்யா 57  இன்னிங்ஸ்களில் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல டி20 போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 4 வெவ்வேறு நாடுகளில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

SKY என்னும் தன்னுடைய பெயருக்கு ஏற்ப ‘வானமே எல்லை’ என  டி20-யில் குறைந்த இன்னிங்ஸ்களில் இத்தனை சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

ஆனாலும் உலகக்கோப்பையில் சூர்யா சொதப்பியதை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை போல. சமூக வலைதளங்களில் வழக்கம் போல அவரை  போட்டு தாளித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: அமைச்சர் சொல்வதென்ன?

தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை!

Suryakumar equals rohit record

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *