ODI போட்டி: ரோகித் சர்மாவிடம் ஆலோசனை கேட்கும் சூர்யகுமார் யாதவ்

Published On:

| By Selvam

suryakumar yadav says odi matches

ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது சவாலாக உள்ளது என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்காக தயாராகி வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை மேற்கொண்டாலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை.

இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “இந்திய அணியில் எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதனை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். ஒரு நாள் போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன்.

டி20 போட்டிகளில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாட நான் பயிற்சி எடுத்து வருகிறேன். இது எனக்கு மிகவும் சவாலான போட்டியாக உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் பேட்டிங்கின் போது சற்று நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து பின்னர் டி20 போட்டி போன்று அதிரடியான ஆட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக நான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலியிடம் ஆலோசனைகள் கேட்டு வருகிறேன். ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

‘குற்றச்சாட்டு’: கொச்சி தமிழரின் கதை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel