டி20 தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இரண்டே நாளில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல் இன்று (அக்டோபர் 5) வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டிருந்த தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், வங்கதேச வீரர் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 3 ஆம் தேதி வெளியான தரவரிசை பட்டியலின்படி சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஆனால் இன்று (அக்டோபர் 5) வெளியான தரவரிசை பட்டியலில் இரண்டே நாளில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் இரண்டு நாள் மட்டும்தான் முதலிடத்தில் இருந்தார் என்றாலும் டி20 கிரிக்கெட் தரவரிசையில், முதலிடத்தைப் பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
தற்போது இந்தப் பட்டியலில் 854 புள்ளிகளுடன் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவை தவிர வேறு எந்தவொரு இந்திய வீரரும் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தைப் பெறவில்லை.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான கே.எல்.ராகுல் 14 ஆவது இடத்திலும், விராட் கோலி 15 ஆவது இடத்திலும், ரோகித் ஷர்மா 16 ஆவது இடத்திலும் உள்ளனர்.
மோனிஷா
தலைவர் தேர்தல்: மாசெக்களிடம் ஆதரவு திரட்டும் ஸ்டாலின்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எத்தனை அம்பயர்?