suresh raina says shubman gill

“சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார்” – ரெய்னா

விளையாட்டு

சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை வீரராக சுப்மன் கில் வளர்ந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 75.50 சராசரியுடன் 302 ரன்களை எடுத்தார்.

சுப்மன் கில் குறித்து சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவிற்கு அளித்த பேட்டியில், “உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாடும் முக்கியமான நபர்களில் ஒருவர் சுப்மன் கில். அவர் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராகவும் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார்  என்பது எனக்கு தெரியும். உலக கோப்பைக்கு பிறகு அவரை பற்றி அடிக்கடி பேசுவோம்.

அவர் மட்டையை சுழற்றும் வேகம் வலிமையானதாக உள்ளது. இதனால் பந்து வீச்சாளர்கள் அவருக்கு பந்து வீசும்போது திணறுகிறார்கள். அவருடைய எண்ணம் இதோடு நின்றுவிடாது. 2019 உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை இந்த ஆண்டு உலக கோப்பையில் கில் மேற்கொள்வார்.

ஒரு நாள் போட்டி அவரது பேட்டிங்கிற்கு நல்ல களம் அமைத்து கொடுக்கும். ஒன்றரை வருடங்களாக நிலையாக ஆடி வருகிறார். மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான போட்டியில் சற்று தடுமாறினார். ஆசிய கோப்பை போட்டியில் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார். தற்போது அனைத்து போட்டிகளிலும் சராசரியாக அரை சதம் முதல் சதம் விளாசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

லேண்டர் ரோவரை மீண்டும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ!

33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: மோடியை பாராட்டிய பெண் எம்.பி-க்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0