இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்தியன் பிரீமியர் லீக் உட்பட அனைத்து போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (செப்டம்பர் 6 ) அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போட்டிக்கு பிறகு கடைசியாக 2021 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இவர் இடம் பெறவில்லை.
தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எனது நாட்டையும், உத்திரப் பிரதேச மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான கவுரவமாகும்.
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். பிசிசிஐ, உத்திரப் பிரதேச கிரிக்கெட் அசோஷிசியன், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐபிஎல் முன்னாள் சேர்மன் ராஜீவ் சுக்லா மற்றும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது திறமையில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது”என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்களில் ஒருவர் ரெய்னா. 205 ஐபிஎல் போட்டிகளில், 5528 ரன்கள் குவித்துள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,605 ரன்களும் எடுத்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆசிய கோப்பை : வரலாற்று வெற்றியை பெறுமா இந்தியா?