டி10 லீக் : கிரிக்கெட் களத்தில் மீண்டும் சுரேஷ் ரெய்னா

விளையாட்டு

பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் டி10 லீக் அபுதாபியில் இன்று (நவம்பர் 23) தொடங்குகிறது.

இந்தியாவில் கொண்டாடப்படும் கிரிக்கெட் ஒவ்வொரு தலைமுறையிலும் புதுவடிவத்தை உள்வாங்கி வருகிறது. ஏற்கெனவே டெஸ்ட், ஒருநாள், டி20 என்று கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில். கடந்த சில ஆண்டுகளாக டி10 போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் டி10 லீக் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 5 சீசன்களில் முறையே கேரளா கிங்ஸ், மராத்தா அரேபியன்ஸ், வடக்கு வாரியர்ஸ் (2 முறை) மற்றும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

அதன் தொடர்ச்சியாக 6வது டி10 போட்டியானது அபுதாபியில் இன்று (நவம்பர் 23) முதல் டிசம்பர் 4 வரை என 12 நாட்களில் 33 போட்டிகள் நடைபெறவுள்ளன.

மொத்தமாக, டெல்லி புல்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ், நார்தர்ன் வாரியர்ஸ், சென்னை பிரேவ்ஸ், பங்களா டைகர்ஸ், டீம் அபுதாபி, நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லி சாம்ப் ஆர்மி ஆகிய 8 அணிகள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கின்றன.

இவற்றில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்களான டுவைன் பிராவோ, அலெக்ஸ் ஹேல்ஸ், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர், ஹசரங்கா, பொல்லார்ட் மற்றும் மோர்கன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்று அபுதாபியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரவு 7.45 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் நிகோலஸ் பூரன் தலைமையிலான நடப்பு சாம்பியன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, கிறிஸ் லின் தலைமையிலான அபுதாபி அணியுடன் மோதுகிறது.

இதில் ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா, முதன்முறையாக டி10 லீக்கில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட உள்ளார்

அதே போல் அபுதாபி டி10 லீக்கில் உள்ள அணிகளில் சுரேஷ் ரெய்னா தவிர்த்து சில இந்திய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஹர்பஜன் சிங் டெல்லி புல்ஸ் அணியிலும், ஸ்டூவர்ட் பின்னி, நவ் பப்ரேஜா ஆகியோர் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும்,

அபிமன்யு மிதுன் வடக்கு வாரியர்ஸ் அணியிலும், ஸ்ரீசாந்தா பங்களா டைகர்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *