கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே , இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது.
இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை உறுதி செய்து பயிற்சியை துவங்க இருக்கும் வேளையில் ’’சன்ரைசர்ஸ்’’ அணியின் புதிய கேப்டன் இன்று (பிப்ரவரி 23 ) அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கேன் வில்லியம்சன். இவர் கடந்த காலங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் அந்த அணியிலிருந்தே வெளியேற்றப்பட்டார்.
இதனால் இந்த ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்பட போகிறார்கள் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்தது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான எய்டன் மார்க்ரமை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
இப்படி இவர் கேப்டனாக அறிவிக்கப்பட முக்கிய காரணம், இந்த ஆண்டு முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற RSA டி20 லீக் தொடரில் சன்ரைசஸ் அணி நிர்வாகத்தின் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி அறிமுகத்தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.அந்த அணிக்கு எய்டன் மார்க்ரம் தலைமை தாங்கி வழிநடத்தியதோடு அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார்.
இப்படி அறிமுக தொடரிலேயே சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கோப்பையை வென்று தந்த அவரது இந்த திறனை உணர்ந்த சன்ரைசர்ஸ் நிர்வாகம் ஐபிஎல் தொடரிலும் அவரையே கேப்டனாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்: கே.பி.முனுசாமி
“இனிதான் எடப்பாடியின் வேகத்தைப் பார்க்கப்போகிறீர்கள்”: சி.விஜயபாஸ்கர்