16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹேரி ப்ரூக் மற்றும் மயங்க் அகர்வால் களம் இறங்கினர்.
இதில் ஹேரி ப்ரூக் ஒரு புறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் மயங்க் அகர்வால் 9 ரன்னும், அடுத்த வந்த ராகுல் திரிபாதி 9 ரன்னும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இதையடுத்து ஹேரி ப்ரூக்குடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இவர்களின் ஆட்டத்தால் ஹைதராபாத் அணியின் ரன் வேகமாக உயர்ந்தது.
இதில் மார்க்ரம் அரைசதம் அடித்த கையோடு 50 ரன்னில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ப்ரூக்குடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார்.
ஒரு முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தோனியை சந்தித்த குஷ்பு…நெகிழ்ச்சி பதிவு!
நாடாளுமன்ற தேர்தலுடன் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரும்: அமித் ஷா