வழக்கமாக ரஞ்சி டிராபி போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். மைதானங்கள் காலியாகவே கிடைக்கும். ஆனால், பிசிசிஐ வீரர்கள் தேர்வுக்கு ரஞ்சி தொடரை முக்கிய அளவீடாக வைத்துள்ளது. Stampede scare at Delhi stadium
இந்த நிலையில் , டெல்லி அணிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரஞ்சி டிராபியில் இன்று கலந்து கொண்டார். ரயில்வே அணிக்கு எதிரான அந்த போட்டி புதுடெல்லியிலுள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பிறகு, விராட் கோலி முதல் தர போட்டியில் விளையாடுவதால் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 8 மணியில் இருந்தே கூட்டம் அலை மோத தொடங்கியது.
மைதானத்தின் 16வது கேட் பகுதியில் அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் காயமடைந்தனர். பல ரசிகர்களின் செருப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. போலீசாரின் பைக்கும் சேதமடைந்தது. போலீசாரும் பாதுகாவலர்களும் கூட காயமடைந்தனர். காயமடைந்த ரசிகர்களுக்கு போலீசாரே, பேண்டேஜ் போட்டு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, போட்டி தொடங்கியதும் டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால், விராட் கோலி பேட்டிங் செய்வது உடனடியாக சாத்தியமில்லை என்பதால், மைதானத்துக்குள் இருந்த ரசிகர்கள் வெளியேற முயற்சித்தனர். ஆனால், பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்காததால், அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஒரு வழியாக வெளியேற முயன்றவர்களை அனுப்பி வைத்தனர்.