பிரிஸ்பேனில் நடைபெறக்கூடிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக, மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் விராட் கோலி கடுமையான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
33 வயதான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் 71 சதங்கள் மற்றும் 24,000-ரன்களுக்கு மேல் கடந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நாளை துவங்க உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக கடுமையான பயிற்சிகளை விராட் கோலி மேற்கொண்டு வருகிறார்.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விராட் கோலி களமிறங்கவில்லை. விராட் கோலி பயிற்சி ஆட்டங்களில் களமிறங்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், விராட் கோலி வலை பயிற்சியின் போது தனக்காக அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், இந்திய அணி பயிற்சியாளர் ஒருவர், விராட் கோலியிடம் உங்களின் வலை பயிற்சிக்கான நேரம் முடிந்து விட்டது என்று கூறுகிறார்.
அவருக்கு பதிலளித்த விராட் கோலி அடுத்த ஆட்டக்காரர் தீபக் ஹூடா பயிற்சிக்கு வரும் வரை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாட உள்ளதால், விராட் கோலி கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம் அக்டோபர் 17-ஆம் தேதியும், நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் அக்டோபர் 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி20 உலக கோப்பை போட்டியானது, அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செல்வம்
ஜெய்பீமை பின்னுக்குத் தள்ளிய காந்தாரா!
சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!