ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்று இன்று (செப்டம்பர் 13) சொந்த நாடு திரும்பிய இலங்கை அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 11ஆம் தேதி நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் 6ஆவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணி. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக முறை ஆசிய கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அன்றாட வாழ்க்கைக்கே அவதியுற்ற இலங்கை நாட்டு மக்களுக்கு இந்த வெற்றி பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில் துபாயில் வென்ற ஆசிய கோப்பையுடன் கேப்டன் தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியினர் சொந்தநாட்டுக்கு இன்று திரும்பினர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து அவர்கள் அனைவரும் சிவப்பு நிற இரட்டை அடுக்கு பேருந்தில் அமர்ந்தபடி சாலையில் இருபுறமும் இருந்த ரசிகர்களின் ஆரவாரத்துடன் பயணம் மேற்கொண்டனர்.
கொழும்பில் இருந்து காட்டு நாயக்க வரை இரட்டை அடுக்கு பேருந்தில் ஆசிய கோப்பையுடன் பயணிக்கும் வீரர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
ரசிகர்களுக்கு விராட் கோலி அட்வைஸ்!