டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் நெதா்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் விளையாடுவதற்கு ஏற்கெனவே 8 அணிகள் நேரிடையாக தகுதி பெற்றுவிட்டன.
இதையடுத்து, மற்ற 8 அணிகளில் சூப்பர் 12 சுற்றில் விளையாடுவதற்காக அடுத்த 4 அணிகளைத் தேர்வு செய்யும் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், குரூப் ‘ஏ’ வில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன.
முதல் சுற்றில் குரூப் ‘ஏ’-வின் கடைசி இரு ஆட்டங்களில் இலங்கை – நெதா்லாந்தையும், ஐக்கிய அரபு அமீரகம் – நமீபியாவையும் வீழ்த்தின.
இதையடுத்து அந்த குரூப்பில் 3 ஆட்டங்களில் தலா 2 வெற்றிகளுடன் இலங்கையும், நெதா்லாந்தும் முறையே முதலிரு இடங்களை உறுதி செய்து சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறின.
இதில் முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் தோற்ற இலங்கை, அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்று முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது.
மறுபுறம் முதலிரு ஆட்டங்களில் வென்ற நெதா்லாந்து, கடைசி ஆட்டத்தில் தோற்றது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் நமீபியாவை வீழ்த்தி, நெதா்லாந்தை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றியது.
இதையடுத்து, சூப்பா் 12 பிரிவில் இலங்கை அணி, குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இணைகிறது. நெதா்லாந்து அணி குரூப் 2இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் இணைகிறது.
ஜெ.பிரகாஷ்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டது ஏன்?
அரசியலிலிருந்து மருது அழகுராஜ் விலகல்!