இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய (நவம்பர் 5) போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அரையிறுதிக்குள் செல்லப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சில போட்டிகளே மீதமிருக்கின்றன.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதின, இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் களமிறங்கி இலங்கை அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
குசல் மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4வது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, தனஞ்சய டி சில்வா களமிறங்கி 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
நிஸ்ஸங்கா தொடர்ந்து விளையாடி 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
சரித் அசலங்கா நிஸ்ஸங்காவுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தார். அதிரடியாக விளையாடி வந்த நிஸ்ஸங்கா 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 15 வது ஓவரில் அடில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஷனகா 3 ரன்கள், ஹசரங்கா 9 ரன்கள் எடுத்திருந்தனர். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 20 ஓவர் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.
ஆகையால் இங்கிலாந்து அணி 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
புள்ளி பட்டியலில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதால் வெற்றி பெறுவது யார் என்ற போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மோனிஷா
“பாதிக்கு மேல் இழப்பு வேறு வழியில்லை”: எலான் மஸ்க்
வம்சியிடம் இதயத்தை வாங்கிய திருமூர்த்தி!