வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தமிழக வீரர் பயிற்சியாளர்!

விளையாட்டு

வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்க ஆசியக் கோப்பையைக் கருத்தில்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில், வங்கதேச டெஸ்ட் ஆட்டங்களுக்கான பயிற்சியாளராகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரஸ்ஸல் டொமினிகோ தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை தவிர, டி20 உலகக் கோப்பை மற்றும் முக்கியமான போட்டிகளில் வங்கதேச அணியின் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் செயல்படவுள்ளார்.

இவர், இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரை 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடந்த ஆறு வருடங்களாக ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

சமீபத்தில் அப்பதவியிலிருந்து அவர் விலகியதையடுத்து, வங்கதேச அணியின் வெள்ளைநிறப் பந்து போட்டிக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஆஸ்திரேலிய அணியில் பணியாற்றிய காலத்தில் ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகர் ஆகிய திறமையான சுழற்பந்துவீச்சாளர்களை உருவாக்கினார்.

மேலும், மேக்ஸ்வெல்லை டி20 போட்டியில் பந்துவீச வைத்ததிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும் இவர், இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பிடித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

ஆசியக்கோப்பை தொடரின் வர்ணனையாளர் பட்டியல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *