வங்காளதேச அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி.
சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரை தொடங்கி வைத்தது பாகிஸ்தான் அணி.
தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 31 இலங்கையின் பல்லிகெலாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ மட்டும் 89 ரன்களை அடித்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய மதீஷ பத்திரனா 4 விக்கெட்டுகளையும், தீக்சனா 2 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா(14), திமுத் கருணரத்னே(1) மற்றும் குசல் மெண்டிஸ்(5) முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
எனினும் அரைசதம் அடித்த சதீரா சமரவிக்ரமா (54) மற்றும் சரித் அசலங்கா(62) இருவரும் அபாரமாக விளையாடி வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 165 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் தனது வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 11வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து நாளை போட்டிகள் எதுவும் கிடையாது. நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியாக பாகிஸ்தானை சந்திக்க உள்ளது இந்திய அணி.
கிறிஸ்டோபர் ஜெமா
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர்: தேதி அறிவிப்பு!
இது தான் நடுநிலையா அமைச்சரே : அப்டேட் குமாரு!
மோடியை சந்தித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா
அதானி குழும முறைகேடு: மோடி தயங்குவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!