ஆசிய கோப்பை : வெற்றி வாகை சூடிய இலங்கை!

விளையாட்டு

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, துபாயில் நடைபெற்றது. நேற்று (செப்டம்பர் 11) நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தி 6ஆவது முறையாக ஆசியகோப்பையைக் கைப்பற்றியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான, பதும் நிசாங்கா, குஷால் மெண்டிஸ் களமிறங்கினர். குஷால் மெண்டிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பதும் நிசாங்கா, ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய குணாதிலக  1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் இலங்கை அணி தடுமாறியது.

sri lanka vs pakistan asia cup 2022

பனுகா ராஜபக்சா, ஹசரங்கா சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹசரங்கா 21 பந்துகளில், 36 ரன்கள் எடுத்து ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

பனுகா ராஜபக்சா 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரவுஃப்  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்தது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் அசாம்,  முகமது ரிஸ்வான்  ஆகியோர் களமிறங்கினர். 3ஆவது ஓவரில் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஃபக்கார் ஜமார் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 

பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.

முகமது ரிஸ்வான் – இப்திகார் அகமது ஜோடி பொறுமையாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இப்திகார் அகமது 32 ரன்களில் மிதுஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

sri lanka vs pakistan asia cup 2022

முகமது ரிஸ்வான் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது.

பாகிஸ்தான் அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர் முடிவில்,  பாகிஸ்தான் அணி 147 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில், பிரமோத் மிதுஷன் 4 விக்கெட்டுகள், ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.

செல்வம்

யு.எஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்ற முதல் போலந்து வீராங்கனை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *