டி20 உலக கோப்பை போட்டியானது வரும் ஜூன் 2 முதல் 29 வரை அமெரிக்கா மற்று மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் இன்று (மே 9) அறிவித்துள்ளது.
அதன்படி கேப்டன் வனிந்து ஹசரங்கா தலைமையிலான அணியில்,
சரித் அசலங்க (துணை கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்தீவ்ஸ், தசுன் ஷனக, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, , மதீஷா பதிரனா, தில்ஷன் மதுசுங்க ஆகிய 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் ஆடவில்லை. அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்துவீசிய பத்திரனா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். தற்போது அவர் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.
ரிசர்வ் வீரர்களாக அசிதா ஃபெர்ணாண்டோ, விஜயகாந்த் வியாஸ்கந்த், ஜனித் லியாங்கே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 3-ஆம் தேதி இலங்கை அணியானது தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது. தொடர்ந்து ஜூன் 7 வங்கதேசம், ஜூன் 11 நேபாளம், ஜூன் 16 நேபாளம் அணிகளுடன் மோத உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷ் – ஏ.ஆர்.ரகுமானின் “அடங்காத அசுரன்”!
ஷவர்மா சாப்பிட்டதால் பறிபோன உயிர்: மருத்துவர்கள் சொல்லும் காரணம்!