இந்திய அணி பந்துவீச்சில் சுருண்ட இலங்கை
ஆசியகோப்பை இறுதிப்போட்டியில் 15 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா இலங்கை அணிகள் மோதும் ஆசியகோப்பை இறுதிப்போட்டி இலங்கை பிரமேதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியானது மதியம் 3 மணிக்கு துவங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமாகவே துவங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்கரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா, குசால் பெராரா களமிறங்கிய வேகத்திலேயே நடையை கட்டினர். நிசாங்கா 2 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் அவுட் ஆனார். குசால் பெராரா ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் கேல் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார்.
இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணியினர் திணறினர். இதுனால் எந்த வீரரும் நிலையாக நின்று ஆடமுடியவில்லை. இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குசால் மெண்டிஸ் (17), சமராவிக்ரமகா (0), அசலங்கா (0), தனஞ்செயா டி செல்வா (4), தசன் ஷனகா (0 ) என இலங்கை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.
செல்வம்
யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!