Gujarat titans get easy win against hyderabad

SRHvsGT : மொஹித் பவுலிங்கில் சுருண்ட ஹைதராபாத்… ஈஸியாக வென்ற குஜராத்!

விளையாட்டு

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று (மார்ச் 31) மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் 12வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹைதராபத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியில் யாருமே 30 ரன்களை தாண்டாத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  162 ரன்கள் குவித்தது ஹைதராபாத். அதிகபட்சமாக அந்த அணியில் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் 29 ரன்கள் குவித்தனர்.

குஜராத் அணி தரப்பில்  மொஹித் சர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் 25 ரன்கள் அடித்த விருத்திமான் சாஹா சபாஷ் பந்தில் ஆட்டமிழக்க முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த தமிழக சாய் சுதர்சன் இருவரும் தேவையான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். இதனால் ஸ்கோர் சீராக உயர்ந்த நிலையில் கில் 36 ரன்களிலும், சாய் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும் அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் (44*) மற்றும் விஜய் சங்கர்(14*) மேற்கொண்டு விக்கெட் விழாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

கடைசி ஓவரில் டேவிட் மில்லர் சிக்சருடன் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹதராபாத் அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த குஜராத் பந்துவீச்சாளர் மொஹித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக இருக்காதா? : பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி ஆவேச பதிலடி!

டீன்ஸ் டீசர்… பார்த்திபன் ஸ்டைலில் ஒரு பேய் படம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0