ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்த இளம்வீரர் ஒருவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் விமர்சனம் செய்துள்ளார்.
ஹைதராபாத் அணியின் இளம்வீரர் அபிஷேக் சர்மா (23) தற்போது ரஞ்சி தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார்.
தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, பந்துவீச்சாளர் சாய் கிஷோருக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். என்றாலும் 36 ரன்கள் எடுத்து விரைவாக ஆட்டமிழந்தார்.
இதைப்பார்த்த ஹைதராபாத் அணி அபிஷேக் சர்மா சிக்ஸர் அடித்ததை வாழ்த்தி, சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தது.
ஆனால் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”4 நாள் போட்டியில் 36 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார். இதனால் அவரது அணியும் தோல்வி அடைந்தது.
அவர்கள் போட்டியை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஒருவர் அணியின் சூழ்நிலை மற்றும் என்ன மாதிரியான போட்டியில் ஆடுகிறோம் என்பதை உணர்ந்து ஆட வேண்டும்,” என அணியின் ட்வீட் கீழேயே காட்டமாக விமர்சனம் செய்தார்.
https://twitter.com/hemangkbadani/status/1759461568830743003
இதைப்பார்த்த ரசிகர்கள், ”பேசாமல் அபிஷேக்கை அவரது சொந்த மாநிலத்தை சேர்ந்த பஞ்சாப் அணிக்கு அனுப்பி விடுங்கள்” என்றும், ”வார்னர், ரஷீத் கானை வெளியில் அனுப்பியவர்கள் தானே நீங்கள்.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ஒன்றும் புதிதில்லை,” எனவும் ஹைதராபாத் அணியை எக்ஸ் தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். srh coach abhishek sharma
ஹைதராபாத் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த, அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் 2௦21-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே நீக்கப்பட்டார்.
https://twitter.com/CricketSatire/status/1759571966204485823
இதேபோல சிறந்த எகானமி வைத்திருந்த பந்துவீச்சாளர் ரஷீத் கானையும் 2௦22-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அந்த அணி தக்க வைக்கவில்லை. srh coach abhishek sharma
அதோடு சமீபத்திய மினி ஏலத்தின் போது கம்மின்ஸ்க்கு வாழ்த்து சொல்ல முயன்ற, டேவிட் வார்னரை அந்த அணி சமூக வலைதளங்களில் பிளாக் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கில் செலவு செய்து முன்னணி வீரர்களை அணியில் எடுத்திருப்பதால், ஹைதராபாத் அணி இந்தமுறை சக அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பே அணியில் விரிசல் விழ ஆரம்பித்து இருப்பதால், ஐபிஎல் தொடரில் அந்த அணி எப்படி விளையாடப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: தலைமை நீதிபதி சந்திரசூட் இரங்கல்!
ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த விலை… ஒரு கிராம் எவ்வளவுன்னு பாருங்க!
டிராக்டர்கள், ஜேசிபிக்களோடு டெல்லியை நோக்கி விவசாயிகள்! மீண்டும் கண்ணீர்ப் புகை குண்டுகள்!