IPL 2024 CSK Vs SRH: அபிஷேக் – மார்க்ரம் அதிரடி… சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்

விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி  வெற்றி பெற்றது.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். ரச்சின் 12 ரன்னிலும், ருதுராஜ் 26 ரன்னிலும்  ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனையடுத்து களமிறங்கிய துபே, ரஹானே ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

துபே 45 ரன்னிலும், ரஹானே 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா 31 ரன்னும், டேரில் மிட்செல் 13 ரன்னும் எடுத்தனர்.

கடைசியாக களமிறங்கிய தோனி 1 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 165 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர்.

டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 31 ரன்கள் எடுத்து தீக்‌ஷனாவின் பந்துவீச்சில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் விளாசி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் (5௦) அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சரியாக 5௦ ரன்களில் இருந்த அவரை மொயின் அலி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார்.

அடுத்ததாக களமிறங்கிய கிளாசன், நிதிஷ்குமார் ரெட்டி நிதானமாக ஆடி இலக்கை எட்டினர். இதனால் 18.1 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 166 இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் அந்த அணி இரண்டாவது வெற்றியினை பதிவு செய்துள்ளது.

அதேநேரம் கேப்டன் ருதுராஜ் தலைமையில் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சொந்த ஊர் போறீங்களா? – சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0