ICC WorldCup 2023: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 311 ரன்கள் குவித்துள்ளது.
லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் இன்று (அக்டோபர் 12) ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் தங்களது முதல் போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியாவும், இலங்கை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் (109) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19 சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதமடித்த அசத்திய ஏய்டன் மார்க்ரம் 56 ரன்கள் குவித்துள்ளார்.
எனினும் கேப்டன் பவுமா(35), வான் டெட் டுசேன்(26) கிளாசன்(29) மற்றும் மார்கோ ஜேன்சன்(26) ஆகியோரின் ஆட்டத்தால் தென்னாப்பரிக்கா அணி சவாலான ஸ்கோரை குவித்துள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும், ஹசில்வுட், கம்மின்ஸ், ஷம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமைச்சர் பொன்முடியின் கடையில் பணம், நகை கொள்ளை!
லியோ படத்துக்கு சிறப்புக் காட்சி ஏன்?: அமைச்சர் பேட்டி!