பிசிசிஐ நடுவர் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை நித்தி புலே மற்றும் அவரது சகோதரி ரித்திகா புலே உள்ளிட்ட 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சகோதரிகள் நித்தி புலே மற்றும் ரித்திகா புலே. கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நித்தி விளையாடியுள்ளார். அவரது தங்கை ரித்திகா புலே 31 முதல் தர ஆட்டங்களில் மத்தியபிரதேச அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த ஜூன் 10 முதல் 13 வரை ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் நடத்திய நடுவர் குழுவில் இடம்பெறுவதற்கான தேர்வில் இருவரும் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 26) வெளியாகின.
தேர்வில் தேர்ச்சி பெற 150க்கு 120 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற நிலையில், நித்தி மற்றும் ரித்திகா இருவரும் முறையே 133.5 மற்றும் 133 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கிருத்திகா மற்றும் விதர்பாவைச் சேர்ந்த அங்கிதா குஹா ஆகியோரும் பிசிசிஐ நடுவர் குழுவில் இடம்பெற தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் பிசிசிஐ பெண் நடுவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மத்திய அமைச்சருக்கு ஆபாச வீடியோ கால் : இருவர் கைது!
சென்னை வில்லிவாக்கம் ஏரியை விரைவில் திறக்க திட்டம்!