டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வெள்ளி வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் பாரிஸ் ஒலிம்பிக்கில் 199 கிலோ எடை மட்டுமே தூக்க முடிந்தது.
மீராபாய் சானு, அதிகபட்சமாக 205 கிலோ வரை எடையை தூக்கியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 202 கிலோ எடை வரை தூக்கியிருந்தார்.
அப்படியிருக்கையில் பாரிசில் தோற்க என்ன காரணம்?
பாரிஸ் போட்டியின் போது, மீராபாய் சானுவுக்கு பிரீயட்ஸ் டைமாக இருந்துள்ளது. அவரின், 3வது நாள் பிரீயட்ஸ் நேரத்தின் போது, போட்டியும் வந்ததால் மீராபாய் சானுவால் ஜொலிக்க முடியாமல் போனது என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், பிரீயட்சின் போது, ரத்த வெளியேறுவதால் தடகள வீராங்கனைகள் எளிதாக சோர்ந்து விடுவார்கள் .மாதவிடாய் காலம் உடலையும் பலவீனப்படுத்தி விடுவதாகவும் பயிற்சி மற்றும் உணவு முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த சமயத்தில் மன அழுத்தம் காரணமாக தங்கள் தன்னம்பிக்கையை இழந்து இலக்குகளில் இருந்து தடகள வீராங்கனைகள் விலகி விட வாய்ப்புள்ளது. மேலும், மாதவிடாய் காலத்தில் உடலில் ஆக்ஸிஜன் குறைவதால், பெண்களின் உடலில் லேக்டிக் ஆஸிட் சுரந்து விடும் . லேக்டிக் ஆசிட் உடலிலுள்ள நீர்ச்சத்தை வெகுவாக குறைத்து விடும்.
சில நேரங்களில் தடகள வீராங்கனைகள் போட்டி காலங்களில் மாத விடாய் வருவதை தடுக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி எடுப்பது தவறு . இத்தகைய மாத்திரைகளால் உடல் எடை அதிகாரிக்கும், ரத்தம் உறைய வாய்ப்பு உண்டும் என்றும் அடிக்கடி மூடு மாறிக் கொண்டே இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
எங்களை காப்பாற்றுவது யார்?: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு!
ஆவணி மாத நட்சத்திர பலன்: திருவாதிரை (17.8.2024 முதல் 16.9.2024 வரை)