இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 93 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷானை, சுப்மான் கில் பாராட்டியுள்ளார்.
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 278 ரன்கள் குவித்தது.
இதனால் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மான் கில், ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 48 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ், இஷான் கிஷான் இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை நான்கு புறமும் சிதற விட்டனர். இஷான் கிஷான் 84 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார்.
ஷ்ரேயஸ் 113 பந்துகளுக்கு 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் இந்திய அணி 45.5 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு வீரர்கள் தங்கும் விடுதியில் சுப்மான் கில், இஷான் கிஷானை விக்ரம் வேதா ஸ்டைலில் கன்னத்தில் செல்லமாக அடித்து பாராட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாய் இஷான் கிஷான்” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
முதல்வரின் தமிழ்மொழி கரிசனம் – அழுவதா? சிரிப்பதா?: அண்ணாமலை விமர்சனம்!
ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!