ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பாபர் ஆசாமை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் நம்பர் 1 வீரராக உருவெடுத்துள்ளார். Shubman Gill beat Babar Azam
மூன்றரை வருடங்களுக்கும் மேலாக (1258 நாட்கள்) ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 2021ஆம் ஆண்டு முதலிடம் பிடித்தார்.
அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகளாக (951 நாட்கள்) யாராலும் அசைக்க முடியாத வீரராக பாபர் அசாம் உலக கிரிக்கெட் அரங்கில் வலம் வந்தார்.
ஆனால் சமீபகால ஒருநாள் தொடர்களிலும், நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.
அதேவேளையில் இந்திய அணியின் தொடக்க வீரராக உருவெடுத்துள்ள சுப்மன் கில் கடந்த ஓராண்டாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய அவருக்கும், முதலிடத்தில் இருந்த பாபர் அசாமுக்கு இடையே ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ஒரு சில புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.
இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி இதுவரை 282 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் பாபர் அசாம். இதனால் பேட்டிங் தரவரிசையில் பின் தங்கி ஆறு புள்ளிகளை இழந்து 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சென்றார்.
நடப்பு தொடரில் 6 இன்னிங்ஸ்களில் இருந்து மொத்தம் 219 ரன்கள் எடுத்துள்ள சுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதன்முறையாக ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் தற்போது பெற்றுள்ளார்.
மேலும் நம்பர் 1 ஒருநாள் போட்டி பேட்ஸ்மேனாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாபர் அசாமின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கில்.
அதே போன்று ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 709 புள்ளிகளுடன் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். Shubman Gill beat Babar Azam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சீமான் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
கோவை பிரபல கல்லூரியில் நடந்த கொடூர ராகிங்… 7 மாணவர்கள் கைது!
’எனர்கா கேமரிமேஜ்’ விழாவில் ஜூரியாகும் முதல் இந்தியர் ரவி கே.சந்திரன்