|

”பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்” – கடுமையாக சாடிய முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர் 28) ஜிம்பாவே அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை தொடர்ந்து, முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை குரூப் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதல் போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவிடம் தோற்று இருந்ததால் இந்த ஆட்டத்தில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தானுக்கு எதிராக ட்ரோல்!

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஜிம்பாவே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதனைதொடர்ந்து ஜிம்பாவே அணியை பாராட்டிய பலநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், பாகிஸ்தான் அணியை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

உண்மையில் ரசிகர்களை விடவும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை தழுவிய பாபர் அசாம் தலைமையிலான சொந்த நாட்டு அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Shoaib Akhtar slamed Babar azam for poor captaincy

மோசமான கேப்டன் பாபர்?

அதன்படி பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூடியுப் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணியின் டாப் மற்றும் மிடில் ஆர்டர் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும். ஆனால் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். ’

பாகிஸ்தானுக்கு மோசமான கேப்டனாக பாபர் அசாம் உள்ளார். கடைசி நாம் தோற்ற 3 ஆட்டங்களிலும் நவாஸ் கடைசி ஓவரை வீசியுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும்” என்று தெரிவித்துள்ளார்.

குளறுபடி இருப்பது உறுதியானது!

மேலும் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் ஆர்டர் உள்ளிட்ட பாகிஸ்தான் மாற்ற வேண்டிய விஷயங்களையும் அக்தர் எடுத்து கூறியுள்ளார்.

”பாகிஸ்தான் அணியின் கேப்டன்சிப் மற்றும் நிர்வாகத்தில் குளறுபடி இருப்பது உறுதியாகி உள்ளது.

Shoaib Akhtar slamed Babar azam for poor captaincy

பாபர் தொடக்க வீரராக பேட்டிங் செய்வற்கு பதிலாக இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்க வேண்டும். ஷஹீன் அப்ரிடியின் உடற்தகுதியில் பெரும் குறைபாடு உள்ளது.

நாங்கள் உங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்போம். ஆனால் நீங்கள் எந்தவிதமான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறீர்கள்?

நீங்கள் வெறுமனே கிரிக்கெட் களத்திற்கு சென்றுவிட்டு வர முடியாது. அதேபோல் எதிரணி உங்களை தானாகவே வெற்றிபெற வைக்கும் என்று எதிர்பார்க்கவும் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு போட்டியில் தோற்றால் வெளியே!

பாகிஸ்தான் தனது அடுத்த சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

இருப்பினும் அடுத்து விளையாட உள்ள 3 போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தால் கூட பாகிஸ்தானின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

“சத்யாவை கொல்ல 10 நாள் திட்டம்” – கொலையாளி சதீஷ் திகில் வாக்குமூலம்!

குற்றவாளி படத்துடன் எச்சரித்த மாநில உள் பாதுகாப்பு பிரிவு: அலட்சியம் காட்டிய சட்டம் ஒழுங்கு பிரிவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts