இயக்குநர் கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. புன்னகை மன்னன் படத்தில் ஒரு ரோலில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை என பல படங்களில் நடித்திருந்தார். விஜய்யின் பத்ரி படத்தில் அவருக்கு உடற்பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடன் ப்ளட்ஸ்டோன் என்கிற ஆங்கில படத்தில் பணியாற்றியிருக்கிறார். shihan hussaini diagnosed cancer
இவர் சிறந்த கராத்தே வீரரும் கூட. ஒரு முறை தனது வலது கையில், 101 கார்களை ஏற்ற வைத்த ஹுசைனி, அதே கையால் 5 ஆயிரம் டைல்ஸ் மற்றும் 1000 செங்கல்களை உடைத்தார். அப்போது, தனது கையில் வந்த ரத்தத்தை கொண்டு ஜெயலலிதாவின் உருவத்தை வரைந்தார். இப்படிதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ரத்தத்தால் 56 ஜெயலலிதா ஒவியங்களை வரைந்தார். இதற்காக, 1,500 மில்லி லிட்டர் ரத்தத்தை பயன்படுத்தியிருந்தார். ஜெயலலிதா மீதுள்ள பற்றால் இப்படி செய்ததாக கூறினார்.
இந்த சமயத்தில் அவரை அன்புடன் கண்டித்த ஜெயலலிதா, இனிமேல் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, கலாஷேத்ரா காலனியில் 18 ஏக்கர் நிலத்தை ஹுசைனியின் காரத்தே பள்ளிக்காக வழங்கினார். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு இங்கு அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. shihan hussaini diagnosed cancer
சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனக்கு ரத்த புற்றுநோய் தாக்கியுள்ளது. ஜெனடிக், வைரஸ் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் புற்று நோய் என்னை தாக்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறகின்றனர். நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளெட்லெட்ஸ் வேண்டும். இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம்.
அதனால், நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்க முடிவு செய்துள்ளேன். பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டார், எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். நடிகர் விஜய்க்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வில்வித்தை வீரர்- வீராங்கனைகளை உருவாக்க வேண்டும்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். shihan hussaini diagnosed cancer
தற்போது, புற்றுநோய்க்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மிக வலுவான மனிதர் வலுவிழந்து படுக்கையில் இருப்பதை பார்க்கும் போது, வாழ்க்கைதான் எவ்வளவு கொடூரமானது என்பதை நமக்கு உணர வைக்கிறது.