இரு இன்னிங்ஸிலும் சதம்: வங்கதேச வீரர் அபார சாதனை!

விளையாட்டு

டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் என்ற பெருமையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ பெற்றுள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி கடந்த14ஆம் தேதி இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தலைநகர் டாக்கவில் உள்ள ஷெர் பங்களா தேசிய மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்கில் களம் கண்டது வங்கதேச அணி.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய  வங்கதேச டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 146 ரன்கள் குவித்தார். அதில் 23 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

தொடர்ந்து விளையாடிய ஆப்கன் அணி தனது முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு சுருண்டது.

இதனால் 136 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்கஸை தொடங்கிய வங்கதேச அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. இதிலும் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த சாண்டோ 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  

ஒரே டெஸ்டில் 2 சதங்கள்!

இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த இரண்டாவது வங்கதேச பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச அளவில் 91வது வீரர் ஆவார்.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அப்போதைய வங்கதேச கேப்டன் மோமினுல் ஹக் சதம் அடித்து சாதனை படைத்தார்.  அவர் முதல் இன்னிங்சில் 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 105 ரன்களும் குவித்தார்.

தனது இரண்டாவது சதத்தை வெறும் 115 பந்துகளில் சாண்டோ பூர்த்தி செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச வீரர்களின் அதிவேக சதமாகும்.

மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே டெஸ்டில் இரண்டு சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

சாண்டோவின் அபாரமான பேட்டிங்கால் வங்கதேச அணி தற்போது 662 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து களமிறங்கிய ஆப்கன் அணி, 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

அடாவடி போக்கில் ஆளுநர்: திருமாவளவன் விமர்சனம்!

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *