ஷாமாவும் சர்மாவும்: அது நாற வாய்… இது வேற வாய்!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை குண்டானவர் என்றும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களிலேயே தகுதி குறைவானவர் என்றும் விமர்சித்திருந்தார். அவரது விமர்சனத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.Shama congrats Rohit Sharma

இதையடுத்து, அந்த பதிவை நீக்கிய ஷாமா விளக்கமளித்து மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “விளையாட்டு வீரர்கள் ஃபிட்னெஸ்சுடன் இருக்க வேண்டுமென்பதற்காக அந்த பதிவை வெளியிட்டேன். உருவக் கேலி செய்யும் நோக்கமில்லை. முந்தைய இந்திய கேப்டன்களுடன் ரோகித் ஷர்மாவை ஒப்பிட்டதில் என்ன தவறு கண்டீர்கள். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. இது ஜனநாயக நாடு. தேவையில்லாமல் என்னை அட்டாக் செய்ய வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

சர்ச்சை வெடித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கீரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவரை இப்படி விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஷாமாவின் விமர்சனத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஷாமாவிடத்தில் பதிவை நீக்க கூறியுள்ளோம். எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம். இந்திய விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரையும் உயர்வாக கருதுகிறோம். எவரையும் குறைத்து மதிப்பிடும் எத்தகைய பேச்சையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்தார்.Shama congrats Rohit Sharma

இந்த நிலையில் , சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியதும் இதே ஷாமா முகமது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “வாழ்த்துக்கள். உங்களின் அற்புதமான திறமை சாம்பியன்ஸ் டிராபியை பெற்று தந்துள்ளது. ஹேட்ஸ் ஆப் கேப்டன். நீங்கள் அணியை வழிநடத்தி 76 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டவர். இக்கட்டான சூழலில் நல்ல இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ், ராகுலுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் அது வேற வாய், இது நாற வாய் என்கிற காமெடிதானே நினைவுக்கு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share