jarvo again coming to ground

INDvsAUS: மீண்டும் மைதானத்தில் நுழைந்த யூடியுபர் அலப்பறை.. வைரல் வீடியோ!

விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டிக்கிடையே பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி பிரபல யூடியுபரான ஜார்வோ மைதானத்தில் திடீரென நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023 உலகக் கோப்பையின் ஐந்தாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல யூடியுபரான டேனியல் ஜார்விஸ் என அழைக்கப்படும் ஜார்வோ இந்திய அணி ஜெர்சியுடன் மைதானத்தில் நுழைந்தார்.

பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மைதானத்தில் ஓடிய அவரை பாதுகாப்பு படையினர் வெளியேற்றினர். போகும் வழியில் விராட்கோலி ஓடிவந்து அவருடன் பேசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ஏற்கெனவே கடந்த 2021 இல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா விளையாடிய போதும் மூன்று போட்டிகளில் இதுபோன்று மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜார்வோ.

ஒவ்வொரு முறையும் ஜார்வோ என பெயரிடப்பட்ட 69 எண் பொறித்த ஜெர்சியில் மைதானத்தில் நுழையும் ஜார்வோ, தற்போது உலகக்கோப்பை போட்டியிலும் முதன்முறையாக அதேயே செய்துள்ளார்.

இதன்மூலம் ஜார்வோ உலகக்கோப்பையிலும் அறிமுகமாகியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி 25 ஓவர்கள் முடிவில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

இஸ்ரேல் போர்: அக்டோபர் 14 வரை விமான சேவை ரத்து!

இஸ்ரேல் போர்: தங்கம் விலை உயருமா? பின்னணி இதுதான்!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0