23 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அமெரிக்காவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தான் இறங்கிய பல களங்களில் வெற்றிவாகை சூடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இந்த நிலையில், செரினா வில்லியம்ஸ் தான் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
செரினாவின் இந்த அறிவிப்பை `வோக் (Vogue)’ செப்டம்பர் இதழ் வெளியிட்டுள்ளது. 40 வயதாகும் டென்னிஸ் நட்சத்திரமான செரினா விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதையும், தன் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த உள்ளதையும் அந்த இதழில் பகிர்ந்துள்ளார்.
“சில நேரங்களில் வாழ்க்கையில் நாம் வேறு திசை நோக்கி நகர்வதை முடிவு செய்ய வேண்டும். ஒன்றை நீங்கள் விரும்பும்போது அந்த நகர்வு உங்களுக்குக் கடினமாக இருக்கும். டென்னிஸ் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.
ஓர் அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன். என்னுடைய ஆன்மிக இலக்குகள் இறுதியாக, வித்தியாசமான தற்போதுள்ள செரினாவைக் கண்டுபிடித்துள்ளன” என செரினா தெரிவித்துள்ளார்.
செரினாவின் இந்தத் திடீர் முடிவு அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
-ராஜ்
சிறுவனின் பிங்கி ப்ராமிஷை காப்பாற்றிய ரோஜர் ஃபெடரர்: அப்படி என்ன செய்தார்?