டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர சேவாக் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியது. இதில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23ஆம்தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, அவர்களது கேப்டன் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணிக்கு அவர் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் அதிக ரன்களை குவிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் குறித்து சேவாக் கூறும்போது, “பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
அவர் பேட்டிங் செய்வதை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. விராட் கோலிபோல பாபர் அசாம் பேட்டிங் செய்கிறார்.
பாபர் அசாம் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது உள்ளத்தில் ஓர் மகிழ்ச்சி ஏற்படுகிறது. உலகக் கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் அதிக ரன்களை எடுப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சேவாக்கின் கணிப்புகள் பல சமயங்களில் உண்மையாகி இருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கூறும்போது,
”வீரேந்தர் சேவாக் தான் கிரிக்கெட்டில் என்னுடைய திறனை முதலில் கண்டறிந்தார். சேவாக் தலைமையின் கீழ் ஐபிஎல் போட்டியில் விளையாடிய போது,
அவர் என்னை ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று கூறிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது” என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
தங்கம் விலை சரிவு: இன்றைய விலை நிலவரம்!
அரசியலிலிருந்து மருது அழகுராஜ் விலகல்!