”மஞ்சள் ஜெர்சியில் விரைவில் சந்திப்போம்”- ஜடேஜா வாழ்த்து!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி இன்று (ஜூலை 7) தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தோனிக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”கேப்டன், தலைவர், லெஜெண்ட். இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்”என்று கூறியுள்ளது.

ஐபிஎல் நிர்வாகம், “ஒரு மனிதன். ஒரு மில்லியன் உணர்வுகள். 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற தல எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் ஜெய் ஷா, “இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் கவர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் அசாதாரண திறன்கள் உலகெங்கிலும் உள்ளவர்களை ஊக்கப்படுத்துகின்றன.

இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் இணையற்ற பங்களிப்புகளுக்கு நன்றி “ என்று கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இன்று, நாளை என்றும் எங்கள் தல தோனியை கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “என்னுடைய ஃபேவரைட் எம்.எஸ்.தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

மயங்க் அகர்வால்,”உங்கள் ஹெலிகாப்டர் சாட்கள்,ஸ்விஃப்ட் ஸ்டம்பிங் எதிரணியின் நம்பிக்கையை உடைத்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்,

சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது பெரிய சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மைதானத்தை பகிர்வது முதல் நமது கனவுகளைப் பகிர்ந்து கொள்வது வரை, நாம் உருவாக்கிய பந்தம் பிரிக்க முடியாதது.

உங்கள் பலம், ஒரு தலைவராகவும், நண்பராகவும், எனக்கு வழிகாட்டும் வெளிச்சம்.

வரும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். பிரகாசித்துக்கொண்டே இருங்கள்” என்று கூறியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மற்றும் என்றென்றும் இவரிடம் எனது பயணம்.

மஹி பாய் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் மஞ்சள் ஜெர்சியில் சந்திப்போம்” என்று கூறி எம்.எஸ்.தோனியை வாழ்த்தி உள்ளார். இதை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

See you soon in the yellow jersey

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியை ஜடேஜா வெற்றிபெற செய்து கேப்பையை பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விண்ணில் சீறிப்பாய தயாராகும்  சந்திரயான்-3

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை!

+1
1
+1
1
+1
0
+1
3
+1
1
+1
1
+1
3