இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

விளையாட்டு

மேற்கிந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று (ஜூலை 24) இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியிலும்  இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக்  கைப்பற்றுமா என்ற ஆவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது. 

இன்று நடைபெறும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் அறையில் மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை நேற்று (ஜூலை 23) சந்தித்து பேசியதை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்த https://twitter.com/i/status/1550763246004871168 வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

– ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.