ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. அதன்பின்னர் இந்திய அணி ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அத்துடன் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்குகிறது.

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர்

முதல் டி20 – செப்டம்பர் 20ஆம் தேதி – மொஹாலி

2வது டி20 – செப்டம்பர் 23ஆம் தேதி – நாக்பூர்

3வது டி20 – செப்டம்பர் 25ஆம் தேதி – ஐதராபாத்

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

முதல் டி20 – செப்டம்பர் 28ஆம் தேதி – திருவனந்தபுரம்

2வது டி20 – அக்டோபர் 2ஆம் தேதி – கவுகாத்தி

3வது டி20 – அக்டோபர் 4ஆம் தேதி – இந்தூர்

இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் போட்டி – அக்டோபர் 6ஆம் தேதி – லக்னோ

2வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 9ஆம் தேதி – ராஞ்சி

3வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கிறது .

மு.வா.ஜெகதீஸ் குமார்

காமன்வெல்த்: பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரருக்கு வெண்கலம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *