சச்சினை கவுரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயிலுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரின் பெயர்களை சூட்டி கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்.

லாரா மற்றும் சச்சினின் கிரிக்கெட் கேரியரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு பிரத்யேக இடம் உள்ளது.

லாரா, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தது சிட்னி மைதானத்தில்தான். 1993-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்திருந்தார் அவர்.

சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 241 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கு இவரது பேட்டிங் சராசரி 157. லாரா, சிட்னி மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சூழலில் அவருக்கான கவுரவத்தை வழங்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்.

SCG honours Sachin Tendulkar

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “மெம்பர்ஸ் பெவிலியனில் உள்ள டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து ஆடுகளத்திற்கு வெளிநாட்டு வீரர்கள் செல்லும் வாயில்களுக்கு சச்சின், லாரா பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் சிட்னி மைதானத்தில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களை விளாசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, இந்த மைதானத்தில் விளையாடி 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி வெளிநாட்டு வீரர்கள் ஆடுகளத்திற்கு வரும் நுழைவாயில்களுக்கு இவர்கள் இருவரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எனக்கு பல சிறந்த ஞாபகங்கள் உள்ளன. வெளிநாட்டு வீரர்கள் ஆடுகளத்திற்கு நுழைய பயன்படுத்தும் நுழைவாயில்களுக்கு எனது பெயரையும், எனது இனிய நண்பர் லாரா பெயரையும் சூட்டியுள்ளதாக கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் சச்சின் டெண்டுல்கர்.

லாரா கூறுகையில், “நான் அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு வருவேன். எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் இந்த மைதானம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எனது பெயரை சூட்டியதற்கு மகிழ்கிறேன். சச்சினும் மகிழ்ந்திருப்பார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’’பாஜக குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள்’’ தமிழிசை

ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி கேட்கும் ஸ்ரேயா

விமர்சனம்: யானை முகத்தான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *